‘உங்களுடைய பராமரிப்பு அணி'யினருடன் எப்போது தொடர்புகொள்வது?
பின் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியுள்ளனவா என்று அவதானிக்குமாறு உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் உங்களை வேண்டுகின்றனர். இந்த அறிகுறிகளில் ஏதும் உங்களுக்கோ, நீங்கள் பராமரித்துவரும் நபருக்கோ தோன்றியிருந்தால், உங்களுடைய மருத்துவமனை, ‘க்ளினிக்' அலது மருத்துவரை உடனடியாக அழையுங்கள்.
- நிறம் மாறியிருக்கும்: சிறுநீர் மங்கலாகவோ, கரு-மஞ்சள் நிறமாகவோ, இரத்தம் கலந்தோ காணப்படும்.
- சிறுநீர் வடிவு இல்லாமை. 2 மணி நேரத்திற்கும் மேலாக சிறுநீர் ஏதும் வடிந்து பையில் சேர்ந்திருக்காது.
- வலி அல்லது சிவந்த நிறம்: இடத்தில் வலி இருக்கும், சிவப்பாக, அல்லது வீக்கமாகத் தோன்றும்.
- காய்ச்சல் அல்லது குளிர்ச்சுரம்: உங்களுக்குக் காய்ச்சல், வியர்த்தல் அல்லது திடீரென ஏற்படும் குளிர் ஆகியன இருக்கும்.
- குழப்பம் அல்லது கிறக்கம்: குழப்பமாக, தலைச் சுற்றலாக அல்லது அசாதாரணமாக இருப்பது போல இருக்கும்.
முக்கியத் தகவல்
வழிகாட்டல்களை மட்டுமே ‘டைமர்-டேக்’ (Timertag) பக்கங்கள் உங்களுக்குத் தருகின்றன, ஆகவே உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் அளிக்கும் அறிவுரைக்கு மாற்றாக இது அமையாது. உங்களுடைய சிகிச்சைக்கு உங்களுடைய ‘க்ளினிக்’ அல்லது மருத்துவமனையே தொடர்ந்து பொறுப்பாக இருக்கும். உங்களுக்கு சுகவீனமாக இருப்பது போல இருந்தால் உங்களுடைய செவிலி அல்லது மருத்துவருடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்களது அந்தரங்கத்தன்மை
நபர் ஒருவரைப் பற்றிய தகவல்களையோ, சுகாதாரப் பதிவுகளையோ ‘டைமர்-டேக்’ திரட்டுவதில்லை. பின்-தொடரல், பகுப்பாய்வுகள் அல்லது நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கணக்குகள் ஆகிய எதுவும் இருக்காது.