‘உங்களுடைய பராமரிப்பு அணி'யினருடன் எப்போது தொடர்புகொள்வது?

பின் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியுள்ளனவா என்று அவதானிக்குமாறு உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் உங்களை வேண்டுகின்றனர். இந்த அறிகுறிகளில் ஏதும் உங்களுக்கோ, நீங்கள் பராமரித்துவரும் நபருக்கோ தோன்றியிருந்தால், உங்களுடைய மருத்துவமனை, ‘க்ளினிக்' அலது மருத்துவரை உடனடியாக அழையுங்கள்.

முக்கியத் தகவல்

வழிகாட்டல்களை மட்டுமே ‘டைமர்-டேக்’ (Timertag) பக்கங்கள் உங்களுக்குத் தருகின்றன, ஆகவே உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் அளிக்கும் அறிவுரைக்கு மாற்றாக இது அமையாது. உங்களுடைய சிகிச்சைக்கு உங்களுடைய ‘க்ளினிக்’ அல்லது மருத்துவமனையே தொடர்ந்து பொறுப்பாக இருக்கும். உங்களுக்கு சுகவீனமாக இருப்பது போல இருந்தால் உங்களுடைய செவிலி அல்லது மருத்துவருடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்களது அந்தரங்கத்தன்மை

நபர் ஒருவரைப் பற்றிய தகவல்களையோ, சுகாதாரப் பதிவுகளையோ ‘டைமர்-டேக்’ திரட்டுவதில்லை. பின்-தொடரல், பகுப்பாய்வுகள் அல்லது நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கணக்குகள் ஆகிய எதுவும் இருக்காது.